சிறகடிக்க ஆசை சீரியல் -அச்சச்சோ விஜயாவா இது.? அதிர்ச்சியில் உறைந்த மனோஜ்..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 5] எபிசோடில் விஜயாவின் பழைய போட்டோ வைரலானது.. ரோகினி மீது முத்து, சுருதிக்கு ஏற்படும் சந்தேகம்..

vijaya (21) (1)

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 5] எபிசோடில் விஜயாவின் பழைய போட்டோ வைரலானது.. ரோகினி மீது முத்து, சுருதிக்கு ஏற்படும் சந்தேகம்..

ரோகிணியிடம் போட்டு வாங்கும் மீனா ..

மீனா முத்து கிட்ட ரோகிணி தான் பார்வதி ஆன்ட்டி கிட்ட இரண்டு லட்சம் பணம் கொடுத்து கொடுக்க சொல்லிருக்காங்க  .வீட்ல தேவையில்லாம எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு அவங்க தாலிய கூட வித்து கொடுத்து இருக்காங்க.. அப்படின்னு சொல்ல அதுக்கு  முத்து  இது நம்புற மாதிரியே இல்லையே.. இதுல ஏதோ ஒன்னு இருக்கு. உன்ன மாதிரி பார்லர் அம்மாவுக்கு இறக்க குணம் எல்லாம் கிடையாது .அந்த மனோஜும் பார்லர் அம்மாவும் ரொம்ப சுயநலமானவாங்க..  அது என்னன்னு முதல்ல கண்டுபிடிக்கணும் அப்படின்னு சொல்றாரு.இப்போ  முத்துக்கு போன் வருது மூணு நாளுக்கு சவாரிக்கு புக் பண்றாங்க.. அடுத்த நாள் காலையில சுருதி மீனா கிட்ட ஆம்லெட் கேட்டுட்டு இருக்காங்க. அப்போ ரோகிணியும் வராங்க .

மீனா  தேங்க்ஸ் ரோகினு சொல்றாங்க ..நீங்க உங்க தாலியை கூட வித்து பார்வதி ஆண்டிகிட்ட ரெண்டு லட்சம் பணம் கொடுத்து இருக்கீங்க என் மேல எந்த பழியும் வரக்கூடாதுன்னு நினைச்சுக்கிறீங்க அதுக்கு தான் ரோகிணி அப்படின்னு சொல்றாங்க.இதைக் கேட்ட ரோகிணி முழிக்கிறாங்க.. அய்யோ மாட்டிக்கிட்டோம்ன்னு ஆனாலும் அப்படியே சமாளிக்கிறாங்க.. இதனால வீட்டுல பிரச்சனையா வந்துச்சுல்ல  அதை சமாளிக்கிறதுக்குத்தான் அப்படி பண்ணேன் .இப்போ ஸ்ருதி அவங்க போனதுக்கு அப்புறம் ரோகினி உங்களுக்கு ஹெல்ப் பண்ற கேரக்டரே  இல்லையே இதுல ஏதோ ஒன்னு இருக்கு அப்படின்னு சொல்றாங்க. இப்போ மனோஜ் ஷோரூம் ல ரோகினி கூட பேசிட்டு இருக்காங்க .அப்போ கண் திருஷ்டி விக்கிறவரு வராரு .மனோஜ பாத்துட்டு உங்க மேல உள்ள கண்ண  எல்லாம் எடுக்க போறேன் சாமின்னு சொல்றாங்க.

shuruthi,meena (1) (1) (1)

கண்திருஷ்டி படமாக மாறிய விஜயா ;

என்னையா சொல்ற புரியிற மாதிரி சொல்லியான்னு கேட்க அதுக்கு அந்த போட்டோவை எடுத்துட்டு வந்து இதுதான் கண் திருஷ்டி படம் ஆந்திராவில் இருந்து பிரிண்ட் ஆகி  வருது.. இத உங்க கடையில மாட்னீங்கன்னா வியாபாரம்  அமோகமா இருக்கும் . உங்க மேல இருந்த பொறாமை கண்ணெல்லாம் போயிரும்  அப்படின்னு சொல்றாரு.மனோஜ் அந்த போட்டோவை பார்த்துட்டு ரொம்ப நாளா இந்த படத்தை கும்பிடுகிற மாதிரியே  பீலா இருக்கு ரோகிணின்னு சொல்றாங்க. ரோகிணி அந்த போட்டோவை எடுத்து பார்க்கிறாங்க மனோஜ் இது உங்க அம்மா டா ..ஆன்ட்டி மேல மாவு கொட்டுனப்போ சுருதி எடுத்த போட்டோ ஸ்டேட்டஸ்ல கூட வச்சால்ல அப்படின்னு சொல்றாங்க.  யோ இது ஏன் அம்மா ..ஆமா இது எல்லாருக்குமே அம்மா தான் உக்கிர சுரூபிணி ரூபத்துல இருகாங்க . போட்டோ விக்கிற எனக்கு தெரியாதா அப்படின்னு சொல்றாங்க.

ஐயோ நீ சும்மா இரு.. அந்த போட்டோ எல்லாம்  எவ்ளோ விலைனு சொல்லு நானே வாங்கிக்கிறேன்  மொத்த போட்டோவையும் மனோஜ் வாங்கிறாரு. இதெல்லாம் அம்மா பாத்தா என்ன ஆகும் அப்படின்னு சொல்றாரு.இப்ப மீனா பூ கொடுக்க வந்திருக்காங்க..  மீனாவ  ஃபாலோ பண்றவரு  மீனாவே பாத்துட்டு இருக்காரு.. மீனா வேகமா வண்டியில் இருந்து இறங்கி பெப்பர் ஸ்ப்ரேயோட போறாங்க. இதை பார்த்து அவரு வண்டி எடுத்துட்டு ஓடிடுறாரு. இப்போ சீதா வராங்க என்னாச்சு அக்கா ஏன் ஒரு மாதிரி இருக்குன்னு கேக்குறாங்க மீனாவும் நடந்தது சொல்றாங்க. இதை கேட்ட சித்தா சிரிக்கிறாங்க. அக்கா உனக்கு கல்யாணம் ஆயிருச்சுனு  சொல்ல வேண்டியது தானே .. ஆமா எனக்கு இது தோணாம போச்சு .சரி மாமா கிட்ட சொன்னா கை கால் எல்லாம் உடைச்சிருப்பார்.. அவர்கிட்ட சொன்னேன் அவர் தான் பெப்பர்  ஸ்பிரே வாங்கி  வச்சுக்க சொன்னாரு ..அத கையில எடுத்தேன் பயந்துட்டு ஓடிட்டான் அப்படின்னு சொல்றாங்க இதோட இன்னைக்கு ஒரு எபிசோட முடிச்சு இருக்காங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்