ஓபனரா ரோஹித் வேண்டாம் அவரை இறங்கி விடுங்க! கம்பீருக்கு வேண்டுகோள் வைத்த ரவி சாஸ்திரி!
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் பேட் செய்யவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா ஆகிய அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியை விளையாடாத ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் கேப்டனாக அணிக்கு திரும்புகிறார் என்பதால் அவருடைய ஆட்டத்தை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகிறார்கள்.
இந்த சூழலில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக விளையாடாமல் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் விளையாடவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “ரோஹித் சர்மா ஆஸ்ரேலியாவுக்கு வந்தது கொஞ்சம் காலதாமதமாக தான் வந்து இருக்கிறார். இந்த சூழலில், அவர் ஓப்பனிங் இறங்கி விளையாடினாள் நிச்சியமாக அவர் செட்டில் ஆக டைம் ஆகும். எனவே, அவரை ஓப்பனிங்கில் களமிறக்காமல் கே.எல்.ராகுலே ஓப்பனிங் செய்யலாம். அவருக்கு பிறகு கொஞ்சம் நேரம் கழித்து ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய வந்தால் அது சரியாக இருக்கும்.
இதற்கு முன்பு ஜெய்ஷ்வால் மற்றும் ராகுல் இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை கொடுத்ததும் இருக்கிறார்கள். எனவே, இந்த முறையும் அதனைப்போலவே கம்பீரை நான் கேட்டுக்கொள்கிறேன். மற்றபடி ரோஹித் அணிக்கு திரும்பியது என்பது பெரிய சக்தி தான். தவிர, கை காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத ஷுப்மான் கில் மீண்டும் அணிக்கு திரும்பினாள் அது இன்னும் வலுவாக இருக்கும்” எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.