Live : ஃபெஞ்சல் புயல் மீட்பு பணிகள் முதல்… விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் வரை…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு மீட்பு பணிகள், இன்று விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி59 ராக்கெட், மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் என பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

Today Live 05122024

சென்னை : ஃபெஞ்சல் புயல் கடந்த ஞாயிற்று கிழமையே கரையை கடந்துவிட்டாலும், இன்னும் அதன் தாக்கம் வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறது. இன்னும் சில இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூரில் 3 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

நேற்று, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுவதாக இருந்த பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இன்று மாலை 4.06 மணியளவில்  புரோபா-3, கரோனா கிராப் ஆகிய செயற்கைக் கோள்களுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்