புஷ்பா 2 ரிலீஸில் சோக நிகழ்வு! கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு!
ஹைதிராபாத் திரையரங்கில் புஷ்பா 2 திரைப்பட சிறப்பு காட்சியை பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
ஹைதிராபாத் : அல்லு அர்ஜுன் நடிப்பில் இன்று பான் இந்தியா திரைப்படமாக பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2. ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம் 2 பாகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை பட ரிலீசுக்கு முன்பே கொடுத்துள்ளது.
இதனால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடாகா மாநிலங்களில் அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்து வருகின்றனர். ஹைதிராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்துள்ளார். இவர் வந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் தியேட்டர் முன் திரளானோர் குவிந்துள்ளனர்.
இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது 2 குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த்த்தார். அவரது மகன் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.