நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!
பிரபல நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் ‘பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் திடீரென்று உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் தங்கி ஒரு வாரம் சிகிச்சைப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2013 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்கிற தமிழ் திரைப்படத்தின் மூலம், ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். தற்பொது, இவர் ‘முந்தினம்’ என்கிற படத்தில் நாயகனாக நடிக்கிறார். விழுப்புரத்தில் மருத்துவராக இருக்கும் லோகநாதன் இப்படத்தை தயாரித்து இயக்குகிறார்.
படத்தில், பவர் ஸ்டார் தவிர இயக்குனர் வேலு பிரபாகரன், ஷங்கர் கணேஷ், ராம் ஆனந்த், யுவராஜ், ஷமிதா, சாவித்திரி, நெல்லை பெருமாள், சித்திக் பாஷா, சில்வஸ்டர் சிம்பு உள்ளிட்ட பலர் நடிக்கின்றன.