பலரும் எதிர்பார்த்த “iQOO 13” இந்தியாவில் அறிமுகம்! விலை எம்புட்டு தெரியுமா?

ஸ்னாப்டிராகன் 8 செயல்திறன் கொண்ட பலரும் எதிர்பார்த்த iQOO 13 போனானது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

iqoo 13

டெல்லி :  iQOO நிறுவனமானது ஒரு வழியாக iQOO 13 ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அறிமுகமாகியுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த அளவுக்கு இந்த போனின் மீது எதிர்பார்ப்பு எழுவதற்கு முக்கியமான காரணமே iQOO 13 போனானது ஸ்னாப்டிராகன் 8 செயல்திறன் கொண்ட காரணம் தான்.

இதற்கு முன்னதாகவே, ஸ்னாப்டிராகன் 8 செயல்திறன் கொண்ட Realme GT 7 Pro  போனை அதனுடைய நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் செய்து வைத்திருந்தது. இந்நிலையில், தற்போது அதனை தொடர்ந்து கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்திய இரண்டாவது நிறுவனம் iQOO தான். இப்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த iQOO அறிமுக விலை என்ன? போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..

சிறப்பு அம்சங்கள் : 

கேமரா : iQOO 13 கேமரா வசதியை பொறுத்தவரையில், மொத்தம் இது மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது. 50 மெகாபிக்சல் சோனி IMX921 முதன்மை சென்சார், 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 32எம்பி முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது.

பேட்டரி : இந்த போன் 6,000mAh பேட்டரி வசதியை கொண்டுள்ளது. அத்துடன்,  120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொண்டுள்ள காரணத்தால் வேகமாகவே உங்களுடைய போனை நீங்கள் சார்ஜும் செய்துகொள்ளலாம்.  0 சதவீதம் இருக்கிறது என்றால் நீங்கள் 30 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ்  செய்து கொள்ள முடியும்.

டிஸ்பிளே : 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 2K AMOLED டிஸ்ப்ளே மற்றும் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் வசதியை கொண்டுள்ளது. எனவே, போனில் 2k வரை சப்போர்ட் ஆகும் வீடியோக்களை பார்க்கலாம்.

செயல்திறன் : இந்த போனின் முக்கிய சிறப்பு அம்சமே ஸ்னாப்டிராகன் 8 செயல்திறன் கொண்டது தான். இந்த செயல்திறனை போன் கொண்டுள்ள காரணத்தால் கேமிங் பிரியர்களுக்கு இந்த போன் மிகவும் பிடிக்கிறது என்றே சொல்லலாம்.

ஸ்டோரேஜ்: சேமிப்பு வசதியை பொறுத்தவரையில் 12ஜிபி ரேம் கொண்ட மாடல் 256GB வசதியுடன் வருகிறது. 16ஜிபி ரேம் கொண்ட மாடல் 512GB ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது.

விலை எவ்வளவு? 

iQOO 13 ஆனது 12GB+256GB மாடலின் விலை ரூ.54,999  மற்றும் 16GB+512GB மாடலின் விலை ரூ.59,999  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில்,   iQOO 13 டிசம்பர் 05, மதியம் 12 மணி முதல் முன்பதிவுக்கு வரும். டிசம்பர் 11, 2024 முதல் மதியம் 12 மணிக்கு vivo பிரத்தியேக கடைகள், iQOO இ-ஸ்டோர் மற்றும் Amazon.in ஆகியவற்றில் விற்பனைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்