வெளுத்து வாங்கும் ரிங்கு சிங்! கேப்டன்சி பொறுப்பு கொடுக்கும் கொல்கத்தா அணி?
ஐபிஎல் 2025க்கான கேகேஆரின் கேப்டன்சி வதந்திகளுக்கு மத்தியில் ரிங்கு சிங் அனல் பறக்க வைக்கும் வகையில் (SMAT) தொடரில் விளையாடி வருகிறார்.
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்காக தான் விளையாடவிருக்கிறார். அவரை கொல்கத்தா அணி 13 கோடிகள் கொடுத்து தக்க வைத்துவிட்டது. அது மட்டுமின்றி அவரை தான் இந்த முறை கேப்டன் பதவி கொடுத்து அதிலும் அவர் சிறப்பாக செயல்பட அணி விரும்புவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த தகவல் ஒரு பக்கம் வைரலாகி கொண்டு இருக்கும் சூழலில், கேப்டன் பதவிக்கு நான் சரியானவன் தான் என்கிற வகையில், நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) கிரிக்கெட் தொடரில் சரியான பார்மில் விளையாடிக்கொண்டு இருக்கிறார். உத்திரபிரதேச அணிக்காக விளையாடி வரும் அவர் டெல்லிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 38 பந்துகளில் 70 ரன்கள் எடுத்துள்ளார்.
அந்த போட்டியை தொடர்ந்து அதற்கு அடுத்த போட்டியில் அவர் ஹிமாச்சல பிரதேசத்திற்கு எதிராக 24 பந்துகளில் 45* ரன்கள் எடுத்தார். ஹரியானாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 32 பந்துகளில் 30* ரன்களும், அடுத்ததாக (டிசம்பர் 1) -ஆம் தேதி நடைபெற்ற அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் 9 பந்துகளில் 26* ரன்களும் எடுத்துள்ளார்.
ஃபினிஷராக ரிங்கு சிங் அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருவதால் அவருடைய பேட்டிங் தரமும் உயர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே, அவர் இந்த போட்டிகளை தொடர்ந்து விளையாடவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் 2025 தொடரில் எந்த மாதிரி விளையாடப்போகிறார் என்பதற்கான எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
எனவே, நிச்சயமா இவர் இந்த மாதிரி ஒரு அதிரடியான ஆட்டத்தை இந்தியாவுக்காக விளையாடவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடினாள் நிச்சியமாக அதற்கு அடுத்தடுத்த போட்டிகளிலும் விளையாட அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த (SMAT) கிரிக்கெட் தொடரில் அவர் சரியான பார்மில் இருப்பதால் நீங்கள் கொல்கத்தா அணியின் கேப்டனாக விளையாட தகுதியான நபர் தான் என கூறி வருகிறார்கள்.