Break-up செய்ததால் ஆண் நண்பர் எரித்துக் கொலை.. பிரபல நடிகையின் சகோதரி கைது!
2 பேரை கொலை செய்ததாக ஹிந்தி நடிகை நர்கீஸ் பக்ரியின் சகோதரி ஆலியாவை நியூயார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி: ப்ரேக்அப் செய்ததால் ஆண் நண்பர் உள்ளிட்ட 2 பேரை கொலை செய்ததாக ஹிந்தி நடிகை நர்கீஸ் பக்ரியின் சகோதரி ஆலியாவை நியூயார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் தங்கை ஆலியா ஃபக்ரி ஆவார். நர்கிஸ் மற்றும் ஆலியா இளமையாக இருந்தபோது, அவர்களின் பெற்றோர் விவாகரத்து செய்தனர். இந்நிலையில், நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரி அலியா, நியூயார்க்கில் உள்ள குயின்ஸில் நகரில் வசித்து வந்துள்ளார்.
அண்மையில், ஆலியாவுடனான உறவை ஆண் நண்பர் ஜேக்கப் பிரேக் ஆப் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்து ஆலியா, கேரேஜில் ஜேக்கப், பெண்தோழி தங்கியிருந்தபோது தீ வைத்துள்ளார். தீ வைக்கும்போது ‘எனது கையால்தான் உனக்கு சாவு’ என ஆலியா சத்தமிட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த சிலர், ஏதோ எரியும் வாசனை வந்ததாகவும், வெளியே சென்று பார்த்தபோது படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சோபா தீப்பிடித்து எரிவதைக் கண்டதாகவும் கூறுகின்றனர்.
இதனையடுத்து, நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரி அலியா ஃபக்ரி மீது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டார். இப்பொது, அலியாவுக்கு ஜாமீன் தர மறுக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அலியாவுக்கு சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.