விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க முடியாது! சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

புதிய திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

chennai high court

சென்னை : இப்போதெல்லாம் ஒரு புது படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்பவர்கள் படம் முடிந்த பிறகு விமர்சனம் கூறும் போது படம் பிடிக்கவில்லை என்றால் கடுமையாக விமர்சனம் செய்வது அந்த படத்தின் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த நவம்பர் 20 அன்று அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால், அது திரைப்படத்தை பற்றி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகர் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக, திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை யூடியூப் சேனல்கள் கள் ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது” என கூறியிருந்தார்கள்.

இதன் காரணமாக தொடர்ச்சியாக படங்கள் வெளியான முதல் 3 நாட்களுக்கு  சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

படங்களை பார்த்துவிட்டு விமர்சிப்பது ஒருவரின் கருத்து சுதந்திரம். எனவே, இதனை பொதுவான ஒரு  உத்தரவாக  பிற்ப்பிக்க முடியாது எனவும், அவதூறு பரப்பினால் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்