கனமழை வெள்ளப்பெருக்கு எதிரொலி… முக்கிய சாலைகள் துண்டிப்பு!

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Road closed

சென்னை : தமிழகம், புதுவையில் கோரத் தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல் காரணமாக, பல்வேறு பகுதிகளின் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று அரசூர் பகுதியில் சென்னை – திருச்சி நெடுஞ்சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இந்நிலையில், அந்தப் பகுதியில் இன்று காலை போக்குவரத்து சீரானது. ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், தி.மலை வட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கோவை – பெங்களூரு நெடுஞ்சாலை

கோவை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் ஓடும் வெள்ள நீரால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து மீட்பு வாகனம் மூலம் இழுத்து செல்லப்பட்டது.

சேலம் – பெங்களூரு சாலை

திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சேலம்-பெங்களூரு சாலையில் போக்குவரத்து நிறுத்த்தப்பட்டுள்ளது. அங்கு பெருக்கெடுத்த ஓடும் வெள்ளத்தில் கார்கள் முழுவதுமாக மூழ்கியது. மேலும், கந்தம்பட்டி பைபாஸ் பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.

புதுச்சேரி – கடலூர் சாலை

புதுச்சேரி – கடலூர் இடையிலான போக்குவரத்து 2வது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் முள்ளோடை பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது.

கும்பகோணம் – தஞ்சாவூர் சாலை

விழுப்புரத்தில் பெய்த கனமழையால் கும்பகோணம் – தஞ்சாவூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. கப்பியாம்புலியூர் ஏரியில் ஏற்பட்ட உடைப்பால் 100 ஏக்கருக்கு மேலான நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

கடலூர் – புதுச்சேரி சாலை

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் – புதுச்சேரி சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. அந்த சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து தாற்காலியமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்