ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: ராகுல் காந்தி வேதனை பதிவு.!

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

FengalCyclone RahulGandhi

சென்னை : தமிழகம், புதுவையில் கோரத் தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல், 12 மனித உயிர்களை பலி வாங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தப் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும்பாலான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களை இடம்பெயரச் செய்துள்ளனர்.

புயல் பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள அவர் தற்காலிக சீரமைப்பு பணிக்காக 2,475 கோடி கோரியுள்ளார். முதற்கட்ட கணக்கெடுப்பில் 69 லட்சம் குடும்பங்கள், 2,11,139 ஹெக்டேர் விவசாய நிலம், 9,576 கி.மீ சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்து வேதனையுடன் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் , “ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டு மனமுடைந்தேன்.

புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். தங்களின் உடைமைகளை இழந்தவர்களுக்கு ஆறுதல்கள். காங்கிரஸ் தொண்டர்கள் உடனடியாக நிராவண உதவிகளை மேற்கொள்ளவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்