அடுத்தடுத்த ஏற்படும் திருவண்ணாமலையில் தொடரும் அதிர்ச்சி!
திருவண்ணாமலையின் தீபமலையில் 3ஆவது இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை : கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் திருவண்ணாமலையில் அடுத்தடுத்த இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
ஏற்கனவே, தி.மலையில் மண்ணில் புதையுண்டு கிடக்கும் குழந்தைகள் உட்பட 7 உயிர்களை மீட்க 20 மணிநேரமாக பெரும் பட்டாளமே போராடுகிறது. இதிலிருந்து மீள்வதற்குள் இன்று காலை மீண்டும் மண் சரிவதை பார்த்த மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஓடினர். அந்த வடு மறைவதற்குள், 3-வது இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, வ.உ.சி.நகர் மலைப்பகுதியில் இரண்டு இடங்களில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், இப்போது அண்ணாமலை தென்கிழக்கு பகுதியில் சுமார் ஆயிரம் அடி அளவிற்கு மழையின் உச்சியில் இருந்து பெரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இது கார்த்திகை மகாதீபம் ஏற்றும் இடத்திற்கு முன்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது 3-வது இடத்தில் மிகப்பெரிய அளவில் மண் சரிவு நிகழ்ந்துள்ளதால் திருவண்ணாமலை மக்கள் தொடரும் அதிர்ச்சியில் உள்ளனர்.