வெளுத்து வாங்கிய கனமழை வெள்ளம்… எங்கெல்லாம் போக்குவரத்து துண்டிப்பு?
கனமழை காரணமாக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகப் பெய்த கனமழையால் விக்கிரவாண்டி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விக்கிரவாண்டி அருகே ஒருவழிப் பாதையாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், டோல்கேட் பகுதி தனித் தீவு போல் மாறியுள்ளது, சுமார் 5 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை – திருச்சி
அதன்படி, வரலாறு காணாத அதி கனமழையால் சென்னை – தென் தமிழகத்தை இணைக்கும் திருச்சி – சென்னை முக்கிய தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
அதாவது, சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விக்கிரவாண்டி அருகே ஒருவழிப் பாதையாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், சென்னை – திருச்சி செல்லும் வாகனங்கள் விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் வழியாக திருப்பி விடப்படுகிறது. திருச்சி – சென்னை வரும் வாகனங்கள் பண்ரூட்டி, கோலியனூர் வழியாக மாற்றிவிடப்படுகிறது.
கடலூர் – புதுச்சேரி
கடலூரில் தென்பெண்ணை ஆற்றில் வரும் நீரின் அளவு காலை 1.7 லட்சம் கன அடியாக இருந்த நிலையில், தற்போது 2.4 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால், பல இடங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால், தென்பெண்ணை ஆற்றில் 2.45 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்திறப்பு அதிகரிப்பால் கடலூர் – புதுச்சேரி – சென்னை சாலை துண்டிக்கப்பட்டது.