மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை… சுற்றுலா பயணிகளுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை வாய்ப்பு பெய்ய வாய்ப்புள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை : மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று (டிச.2) மிக கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒகேனக்கல், சிறுவாணி ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், சுற்றுலாப் பயணிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்த்தப்பட்டுள்ளது.
Weather advisory for tourism activity over western Ghat districts:
Heavy to very heavy rainfall likely over the Western ghat and adjoining areas including Hogenakkal, siruvani and other dams in the region. The public and tourists are advised to take necessary precautions.— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 2, 2024