எதிர்பார்த்த வெற்றி கிடைக்கல…முன்பே ஓடிடியில் வெளியாகும் கங்குவா?
கங்குவா திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை உலகம் 2முழுவதும் 180 கோடிகள் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் படக்குழு திட்டமிட்ட தேதியை விட இன்னும் விரைவாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய வெளியான தகவலில் தெரியவந்துள்ளது.
கங்குவா வசூல்
கங்குவா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படக்குழு படம் அந்த மாதிரி இருக்கும்..இந்த மாதிரி இருக்கும் என்று கூறி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தார்கள். படத்தில் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருந்தாலும் மக்கள் படத்திற்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
இதன் காரணமாக படக்குழு எதிர்பார்த்த அளவுக்கு வசூலுமே கிடைக்கவில்லை. மொத்தமாக 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றிருந்தது என்றால் நிச்சயமாக 500 கோடி வரை வசூல் செய்து இருக்கும். ஆனால், விமர்சனம் சரியாக கிடைக்கவில்லை என்பதால் படம் 180 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கங்குவா ஓடிடி?
இந்நிலையில், கங்குவா படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறிய ரசிகர்கள் படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும்? என ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர்களுக்காக இப்போது படம் எந்த ஓடிடியில் வெளியாகும் என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, அமேசான் பிரைம் கங்குவா படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. படத்தினை டிசம்பர் 13 அன்று ஸ்ட்ரீமிங் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.