திருவண்ணாமலையில் நிலச்சரிவு: “18 மணி நேரம் ஆகியும் இன்னும் மீட்கப்படவில்லை” – எடப்பாடி பழனிசாமி!

அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இப்பேரிடரில் சிக்கித்தவிப்போரை உயிருடன் மீட்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

edappadi palanisamy Tiruvannamalai Landslide

திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழக்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவில் வ.உ.சி நகர் 9-வது தெரு மேட்டில் உள்ள வீடுகள் மண்ணில் புதைந்தது.

மண்ணில் புதைந்த அந்த வீடுகளில் மொத்தமாக  7 ஏழு பேர் சிக்கிக் கொண்டுள்ளதாக  வெளிவந்த தகவலின் படி, தற்போது அந்த பகுதியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன்  மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து, விரைந்து செயல்பட்டு இப்பேரிடரில் சிக்கித்தவிப்போரை உயிருடன் மீட்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிலச்சரிவால், மண்குவியல் மூடியதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

நிலச்சரிவு ஏற்பட்டு 18 மணி நேரம் ஆகியும் மண்ணில் புதையுண்டவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இப்பேரிடரில் சிக்கித்தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துவதுடன், நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் பூரண நலத்துடன் மீட்கப்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்