கடலூர் எப்படி இருக்கு? வீடியோ கால் செய்து ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தென்பெண்ணை ஆறு வெள்ள பாதிப்புகளை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை வீடியோ காலில் தொடர்புகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

Cuddalore mk stalin

கடலூர் : ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கம் பெரிய அளவில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது என்றே கூறலாம். ஏனென்றால், இந்த புயலின் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்து சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரை பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு 50.3 செ.மீ. மழை  பெய்த காரணத்தால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைப்போல, புயல் மழையின் கோரத் தாண்டவத்தால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனத்தில் கிடங்கல் ஏரியில் இருந்து நாகலாபுரம் செல்லும் பாலம் உடைந்து ஏரியின் உபரி நீர் நகரத்துக்குள் வெள்ளமாக செல்கிறது.அதைப்போல, கடலூர் தென்பெண்ணை நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களை தங்க வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

அந்த சமயம், ஆறு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை வீடியோ காலில் தொடர்புகொண்டு, பாதிப்புகள் எந்த அளவுக்கு ஏற்படுத்தியுள்ளது? மக்கள் நலமாக இருக்கிறார்களா? என்பது  குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அங்கிருந்த மக்களிடமும் வீடியோ கால் மூலம் நலம் விசாரித்தார்.

அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ” மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு அடிப்படை வசதி அவர்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 7 மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் வேகமாக வடிந்து கொண்டு இருப்பதால் மக்கள் யாரும் பயப்படவேண்டாம்” எனவும் அவர் தெரிவித்தார்.

பிறகு, கடலூர் மாநகராட்சி சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் பொதுமக்களுக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
E-pass
sunita williams
ashwani kumar HARDIK
Commercial cylinder price
ashwani kumar
MI vs KKR - IPL 2025 (1)