மதியம் 1 மணி வரை ஆரஞ்சு அலர்ட் முதல் மிதமான மழை வரை.!
தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை : ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21 செ.மீ. மேல் மழை பெய்யும் என்பதால் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கனமழை நீடிக்கும் என்றும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறையில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 1, 2024