சீரான சென்னை விமான நிலையம்… மீண்டும் சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கியது.!
மழைநீர் தேங்கியதால் நேற்று மூடப்பட்ட சென்னை விமான நிலையம் இன்று காலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.
சென்னை : தமிழகத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, சென்னையில் இன்று அதிகாலை 4 மணி வரை விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு 11.30 மணி அளவில் கரையைக் கடந்த நிலையில், சென்னை விமான நிலைய செயல்பாடுகளை நேற்று நள்ளிரவு 1 மணி முதல் தொடங்கப்பட்டது.
கிட்டத்தட்ட 13 மணி நேரத்திற்கு பிறகு விமான சேவை தொடங்கியுள்ளது. முன்னதாக, ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலைய ஓடுபாதையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சென்னை விமான நிலையம் மூடப்படுவதாகச் சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்தது.
அதன்படி, சென்னை விமான நிலையத்தில் 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவித்திருந்தது. இதனையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவங்களின் மேலாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், விமான சேவையை நள்ளிரவு 1 மணி முதல் தொடங்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அனைத்து பயணிகளும் தங்களின் பயண சேவைகள் தொடர்பாக சம்பந்தபட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் , இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவங்களின் மேலாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை விமான நிலைய செயல்பாடுகளை O1:OO (01.12.2024) முதல் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பயணிகளும் தங்களின் விமானங்கள் தொடர்பாக சம்பந்தபட்ட… pic.twitter.com/cxM2ZAubkr
— Chennai (MAA) Airport (@aaichnairport) November 30, 2024