“எப்பா நா கெளம்பிறேன்”….ஆட்டம் காட்டிய ‘ஃபெஞ்சல்’ புயல் ஒரு வழியாய் கரையைக் கடந்தது!
வங்கக்கடலில் உருவாகி இருந்த ஃபெஞ்சல் புயல் மணிக்கு 70கிமீ வேகத்தில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடந்துள்ளது.
சென்னை : கடந்த 5 நாட்களாக முதல் தமிழகத்தில் ஆட்டம் காட்டி வந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையைக் கடந்துள்ளது. முன்னதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கு முன்பிலிருந்தே அதன் போக்கை வானிலை ஆய்வு மையத்தால் சரியாக கணிக்க முடியாமல் இருந்தது.
இதனால், புயல் கரையைக் கடக்கும் சரியான இடத்தையும் சரியான நேரத்தையும் கணிக்க முடியாமலே இருந்தன. ஆனால், அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணி அளவில் ஃபெஞ்சல் புயலானது கரையைக் கடக்க தொடங்கியதென வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி, 10 கி.மீ. வேகத்தில் புயலானது கரையை நோக்கி நகர்ந்தது. மேலும், அவ்வப்போது அதன் வேகம் குறைந்தும் திடிரென அதிகரித்தும் காணப்பட்டது. இந்த நிலையில், இன்று இரவு மணிக்கு காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரையை கடந்துள்ளது.
இது கரையைக் கடக்கும் பொழுது 70 முதல் 90.கி.மீ வேகத்தில் கரையைக் கடந்துள்ளது. இதனால், ஓரிரு இடங்களில் மரங்கள் முறிந்து., மின்கம்பங்கள் சரிந்தும் உள்ளது. மேலும், அதனை உடனடியாக சீரமைக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதே போல புயல் முழுவதுமாக கரையைக் கடக்கும் வரையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் ஆட்டம் காட்டி வந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையைக் கடந்துள்ளது. முன்னதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கு முன்பிலிருந்தே அதன் போக்கை வானிலை ஆய்வு மையத்தால் சரியாக கணிக்க முடியாமல் இருந்தது.
இதனால், புயல் கரையைக் கடக்கும் சரியான இடத்தையும் சரியான நேரத்தையும் கணிக்க முடியாமலே இருந்தன. ஆனால், அதைத் தொடர்ந்து இன்று மாலை 5.30 மணி அளவில் ஃபெஞ்சல் புயலானது கரையைக் கடக்க தொடங்கி இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.
அதன்படி, 10 கி.மீ. வேகத்தில் புயலானது கரையை நோக்கி நகர்ந்த புயலானது அவ்வப்போது அதன் வேகம் குறைந்தும் திடிரென அதிகரித்தும் காணப்பட்டது. இந்த நிலையில், இன்று இரவு 11.30 மணிக்கு புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது.
இது கரையைக் கடக்கும் போது மணிக்கு 90கி.மீ வேகத்தில் காற்று வீசி இருக்கிறது. மேலும், கரையைக் கடந்ததாக கூறப்படும் ஃபெஞ்சல் புயல், திடீரென மையம் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதாவது, புயல் கரையைக் கடந்தாலும் புயலின் முன்பகுதியானது கடந்த 6 மணி நேரமாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்காமல் இருந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.