தற்போதைய மழை அப்டேட்! மிக கனமழை முதல் மிதமான மழை வரை…

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain update in tamilnadu

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது வடதமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

அவ்வப்போது மழை குறித்த தகவலை தெரிவிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது இன்று (நவம்பர் 30) மாலை 4 மணி வரையில் எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற விவரத்தை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை,  திருவண்ணாமலை,விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது .

அடுத்து , திருப்பூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்