நெருங்கும் புயல்: இங்கெல்லாம் பேருந்து இயங்காது! முழு விவரம்…

அதிகாலை முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

arasu bus cancel

சென்னை : ஃபெஞ்சல் புயல் நாளை கரையைக் கடப்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

பெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம். மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் , புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் சேவை தற்காலிகமாக நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இன்று (30.11.2024) அதிகாலை முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் மரங்கள் முறிந்து விழ வாய்ப்பிருப்பதால் அதன் அருகே நிற்பதை மக்கள் தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்