நெருங்கும் புயல் : நாளை சென்னை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக நாளை ( நவம்பர் 30.11.2024) கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 15 ஆக அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிவிப்பில் தகவலை தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி, நாளை பிற்பகல் பொழுதில் நகர்ந்து சென்று புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கவுள்ள இந்த புயலானது சென்னைக்கு 250கீ.மீ அருகில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும்போது கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கனமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தங்களுடைய மாவட்டங்களில் விடுமுறை குறித்த விவரத்தை அறிவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை ( நவம்பர் 30.11.2024) விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தார்கள். இதனையடுத்து, தற்போது சென்னையிலும் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (நவ.30) சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.