கொலை கொள்ளை அதிகரிப்பு.. விடியா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி பேட்டி!
வரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசோடு இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஓமலூர் : சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (நவ-29) அதிமுக கள ஆய்வு கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், அந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் சட்டமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசனையும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், ஆளுங்கட்சியாக திமுக மீது பல குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார். அந்த பேட்டியில் அவர் பேசியதாவது,”தமிழகத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது. நான் தினமும் அறிக்கை வாயிலாக தெரிவித்துக் கொண்டே வருகிறேன்.
ஆனால், ஸ்டாலின் அரசாங்கம் அதனைக் கண்டுகொள்வதில்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக் குறியாகவே உள்ளது. மேலும், சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. இன்றைய தினம் திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இன்று GST வரி தொடர்பாக வியாபாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர். எனவே, இதையெல்லாம் தமிழக அரசு மத்திய அரசோடு இணைந்து நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த சூழ்நிலையில் வரிமேல் வரி போட்டு அவர்கள் மேலும் பாதிக்கப்படும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கும் மத்திய, மாநில அரசு ஈடுபட்டுள்ளதை நினைக்கும் பொழுது மிகுந்த வேதனை அளிக்கிறது.
மேலும், மத்திய அரசோடு இணைந்து இந்த GST வரி தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த விடியா திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்”, என எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025