ஆட்டம் காட்டிய “ஃபென்ஜல்” புயல்! உருவானது எப்படி?
கடந்த 2 நாட்களாக நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 'ஃபென்ஜல்' புயலாக உருவெடுத்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்து கடந்து 2-3 நாட்களாக வானிலை ஆய்வாளர்களுக்கு ஆட்டம் காட்டி வந்தது. இதனால், அவர்கள் ஒன்று கணிக்கையில் வானிலை ஒன்றை நடத்தி வந்தது. இதன் காரணமாக, புயலை குறித்த அவர்களது கணிப்பும் அவ்வப்போது தவறியது.
இந்த நிலையில், கடைசியாக கூட இன்று மாலை புயல் உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், புயலானது மீண்டும் ஒரு போக்கு காட்டி பிற்பகல் 2.30 மணிக்கெல்லாம் புயலானது உருவாகி இருக்கிறது. இப்படி ஆட்டம் காட்டிய ஃபென்ஜல் புயல் உருவானது எப்படி என்பதை படிப்படியாக பார்க்கலாம்.
புயல் உருவான கதை :
- நவ-26ம் தேதி பகல் 12 மணியளவில் வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதாவது நவ-27 அன்று புயலாக உருவெடுக்கும் என கூறப்பட்டது.
- ஆனால், அடுத்த நாளே புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், நவ-27 அன்று அதாவது நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவெடுக்கும் என கூறப்பட்டு வந்தது.
- அதனைத் தொடர்ந்து, அடுத்த நாள் காலை நவ-28 (நேற்று) மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டதால் மீண்டும் புயல் உருவெடுக்க தாமதம் ஆனது.
- இதன் காரணமாக நேற்று நவ-28 மதியம் 3 மணி அளவில் தற்காலிக புயலாக உருவெடுக்கும் என கூறப்பட்டது.
- அதன் பின் நேற்று இரவு 8 மணி அளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுக்க வாய்ப்புகள் இல்லை
- எனவும் தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
- அதன்பின், இன்று (நவ-29) காலை 8 மணி அளவில் வலுஇழக்காமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும் என கணித்தனர்.
- அதனைத் தொடர்ந்து, அடுத்த 3 மணி நேரத்தில் 11 மணி அளவில் இது புயலாக உருவெடுத்து கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
- ஆனால், புயல் அப்போதும் உருவெடுக்காமல் இன்று மாலைக்குள் புயலாக வலுப்பெறும் என கூறப்பட்ட நிலையில் மதியம் 2.30 மணிக்கு ஃபென்ஜல் புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
புயலாக உருவெடுத்த நிலையில் நாளை (நவ-30) மதியம் காரைக்கால் மாற்று மகாமலிபுரம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கரையைக் கடக்கும் போது 70 முதல் 90 கி.மீ வரையில் காற்றும் வீசக்கூடும் என தெரிவித்துள்ளனர்.