“வன்முறையை தடுக்கணும் மசூதி ஆய்வை உடனே நிறுத்துங்க”.. அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய திருமாவளவன்!

வன்முறை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991ஐப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

thol thirumavalavan amit shah

உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று உள்ளது.  இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக இந்து கோவில் ஒன்று இருந்ததாகவும், அந்த கோவிலை இடித்துவிட்டு அதன் பிறகு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது எனக் கூறி வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் சம்பலில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில்  மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து பார்த்த நீதிமன்றம் மசூதி ஆய்வு செய்யவேண்டும்…அதற்கு ஒரு குழு அமைத்து அதற்கான ஆய்வை தொடருங்கள் என உத்தரவிட்டது. நீதி மன்றத்தின் உத்தரவின்படி, உள்ளூர் போலீஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி மசூதியில் ஆய்வு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்கு அந்த பகுதியில் இருந்த பலரும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார்கள்.

இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் ஆய்வு குழு ஷாஹி ஜமா மசூதிக்கு சென்றது. இவர்கள் வருகை தந்ததை பார்த்த உள்ளூர் மக்கள் பலரும் ஒன்றாக இணைந்து ஆய்வு செய்தவர்கள் மீது கல்வீச்சு நடத்தி இருந்தது. இன்னும் அங்கு கலவரம் முடியவில்லை என்பதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜித்தின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்தக் கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எம்.பி. திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ” வன்முறை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991ஐப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் சம்பல் ஜாமா மஸ்ஜித்தில் அனைத்து ஆய்வு நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்.சம்பலில் சிறுபான்மை சமூகத்தினரின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

நவம்பர் 24 சம்பவங்கள், குறிப்பாக போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் காவல்துறையின் தவறான நடத்தைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும் தேசத்தின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளைத் தடுப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக ஒன்றிய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் .” என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்” என திருமாவளவன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - Cyclone to Conference
Government Advice
tn school leave
Sorgavaasal Twitter Review
cyclone Chengalpattu
balachandran weather alert
School Leave in Cuddalore