அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகிறது ஃபெங்கல் புயல் ..வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
இன்று பிற்பகலில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 400கி.மீ. தொலைவில் மையம் கொண்டு இருக்கிறது. மேலும். 7கி.மீ வேகத்தில் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. முன்னதாக இது கரையைக் கடக்கும் போது வலுவிழந்து கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது வலுவான புயலாகவே கரையைக் கடக்கும் எனவும் இது கரையைக் கடக்கும் போது 90கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது
கரையைக் கடக்கும் போது பெரிதளவு பாதிப்பு இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த தகவலை தற்போது வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறவுள்ளது.
இந்த புயலானது நாளை பிற்பகலில் வடதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புயலாகவே கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70கி.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்”, என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 29, 2024