பிரியா பவானி சங்கர் யாரு கூட நடிக்கிறாங்க தெரியுமா..!!!
தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். கடைசியாக அவர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் கைவசம் எந்த படமும் இல்லை.
தற்போது அவர் அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் அவர் மதுரையில் இருக்கும் டீச்சர் வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.
இயக்குனர் ஸ்ரீ கனேஷ் இந்த படத்திற்காக ஒரு தமிழ் முகத்தை தான் ஹீரோயினாக தேர்வு செய்ய வேண்டும் என முடிவெடுத்ததும், முதலில் நினைவுக்கு வந்தது பிரியா தானாம். மேயாத மான், டிவி சீரியலில் பார்த்து தான் அவர் இந்த முடிவெடுத்தாராம்.
ஷூட்டிங் அடுத்த வாரம் துவங்கவுள்ளது.