பள்ளி – கல்லூரி விடுமுறை அப்டேட் : சென்னை, செங்கல்பட்டு, கடலூர்…
இன்று கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும், கடலூர், விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை முதல் சென்னை வரையில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் அதி கனமழை வரை பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது.
கனமழை காரணமாக, ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்து விட்டது. அதே போல புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையிலும் கடந்த 2 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இன்று (நவம்பர் 29) சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டிலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை 9கிமீ வேகத்தில் நாளை சென்னை கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என்பதால் நாளை வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்