“காப்பாத்துங்க படகு அனுப்புங்க”…கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் கோரிக்கை!

கடலூரில் நடுகடலுக்குள் கப்பல் இறங்குதளத்தில் தவிக்கும் 6 மீனவர்கள், தங்களை மீட்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

FisherManRescue

கடலூர் : வங்கக்கடலில் இன்று மாலையில் உருவாகவிருக்கும் புயல் அடுத்த இரு நாட்களுக்குள் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த புயல் உருவாகுவதற்கு முன்னதாகவே மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

கடலூர் மாவட்டத்தில் கடலுக்குள் மீனவர்கள் செல்வதற்குத் தடையும் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த தடைகளையும் தாண்டி ஆபத்தை உணராமல் கடலூர் தைக்கால் தோணித்துறையைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை எடுக்கச் சென்ற போது படகு கவிழ்ந்ததால் கடலில் விழுந்துள்ளனர். அவர்கள் சென்ற படகுகள் கடல் சீற்றம் காரணமாக சித்திரைப்பேட்டை அருகே கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், மீனவர்கள் கடலில் தத்தளித்தனர்.

பிறகு கடலுக்கு அருகிலிருந்த ஜெட்டா என்கிற தனியார் துறைமுகத்தில் தஞ்சம் அடைந்தனர். தற்போது அங்கு இருக்கும் அவர்கள் தனியார் செய்தி நிறுவனம் வாயிலாக கடலில் இருந்து மீன் வளத்துறைக்கு தங்களை காப்பாற்றுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர். “இப்போது கடல் சாதுவாக இருப்பதால் எங்களுக்குப் படகு அனுப்பி வையுங்கள்…இந்த துறைமுகத்திலிருந்து கடற்கரை ஒரு கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கிறது. ஆனால் என”  கோரிக்கை வைக்கிறார்கள்.

ஆனால், மீன்வளத்துறை மற்றும் கடலோர கடற்படை துறையினர் ஒரு வேலை அவர்களை மீட்கப் படகு கடலுக்குச் செல்லும்போது அலை சீற்றம் அதிகமாக இருந்தால் அந்த படகும் கவிழ்ந்துவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, புயல் கரையைக் கடக்க இன்னும் 2 நாட்கள் இருக்கிறது. புயல் கரையை கடைந்து இயல்பு நிலைமை திரும்பும் வரை அங்கே பாதுகாப்பாக இருங்கள் என அறிவுறுத்தியுள்ளனர். மீனவர்கள் அந்த துறைமுகத்தில் சாப்பாடு மற்றும் தண்ணீர் கிடைத்துப் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடலுக்கு நடுவில் தத்தளிக்கும் 6 மீனவர்களை மீட்பதில் 2-வது நாளாகச் சிக்கல் தொடருவதால் அவருடைய உறவினர்களும் வேதனையில் உள்ளனர். இதனையடுத்து, மீன்வளத்துறை அதிகாரிகள் தைக்கால் தோணித்துறை பகுதிக்கு வந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆறுதல் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்