வேகமாய் நகர்ந்து வரும் புயல் சின்னம்! எப்போது புயலாக உருவெடுக்கும்?
அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருமாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவான புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதிலும், தமிழகத்தின் கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் ஒரு சில மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
மேலும், தற்போது உருவாகி இருக்கு இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருமாறலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை 5.30 அளவில் அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது.
இது இலங்கையின், திருகோணமலைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 130 கி.மீ., தென்கிழக்கே 400 கி.மீ. நாகப்பட்டினம், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 510 கி.மீ., சென்னைக்கு தென்-தென்கிழக்கே 590 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை 5.30 அளவில் அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது.
இது இலங்கையின், திருகோணமலைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 130 கி.மீ., தென்கிழக்கே 400 கி.மீ. நாகப்பட்டினம், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 510 கி.மீ., சென்னைக்கு தென்-தென்கிழக்கே 590 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது”, என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருவதால் இன்று மதியம் அல்லது இன்று இரவு புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது.