Live : தமிழக வானிலை அப்டேட்ஸ் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரை!
இன்றைய நாளின் முக்கிய செய்திகள் அனைத்தும் கிழே கொடுக்கப்பட்டு வருகிறது....
சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 510 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து 590 கிமீ தெற்கு-தென் கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. மேலும், அது தமிழக கடற்கரை நகர்ந்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே போல அடுத்த 12 மணி நேரத்தில் ஃபெங்கல் புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும், எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முன்தினம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று மீண்டும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது.