ஃபெங்கால் புயல் எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

கனமழை காரணமாக இன்று (27.11.2024) எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகிறார்கள்.

School Holiday

சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் நகர்கிறது, இது இன்று புயலாக வலுவடைந்து இலங்கையை ஒட்டி தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக நேற்று முதலே அந்தந்த மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து வருகின்றனர். இதுவரை 17 மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டள்ளது.

பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை

அதன்படி, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி,, ராமநாதபுரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு மட்டும் விடுமுறை

அதேபோல, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, புதுக்கோட்டை, சிவகங்கை , அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மாநிலத்திலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில்  விடுமுறை

கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live , Cyclone Fengal
LIVE NEWS TAMIL
gold price
Cyclone Felgam
Droupadi Murmu
US President - Israel Hezbolla war
Exams Postpond
pradeep john - tn rain