இந்த 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
இன்று ( நவம்பர் 26), நவம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் வலுப்பெற்று நாளை புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியநிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக வரும் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என்றும், நாகையில் இருந்து தெற்கே-தென்கிழக்கே 590 கிமீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 710 கிமீ தெற்கே-தென்கிழக்கே தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர் 26), நவம்பர் 27, நவம்பர் 28ஆம் தேதிகளில் மழை தொடரும் என்றும் , ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.