பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்!
ஜனவரி 14ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு, தற்போது ஜனவரி 16ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜன. 12, 16,18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது.
பொங்கலன்று நடத்தப்படவிருந்த தேர்வை வேறு தேதிக்கு மாற்றுமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில், ஜனவரி 14ல் நடைபெறவிருந்த தேர்வு, தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டின் பண்பாட்டை சீர்குலைக்க பொங்கல் நாளில் சி.ஏ. தேர்வு அறிவித்ததாக கடும் கண்டனம் எழுந்தது. கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தேதியை மத்திய அரசி மாற்றியுள்ளது.
தமிழர் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த #ICAI தேர்வுகளை மாற்ற வேண்டுமென கடிதம் எழுதியிருந்தேன்.
தற்போது பொங்கல் திருநாள் அன்று இருந்த தேர்வு தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது .
நன்றி ! #ICAI #Exam #Pongal #Tamil pic.twitter.com/vMMyVpfr3I
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 26, 2024
இது தொடர்பாக, மக்களவை எம்.பி., சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், “எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை, அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. “அறுவடைத் திருநாளான” பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு” என கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கை யை ஏற்றுக்கொண்ட பட்டயக் கணக்காளர் நிறுவனம் தற்பொழுது தேதி மாற்றம் செய்து அறிவித்துள்ளது.
பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள்.
எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை.
அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை.
ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று.
தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு. 1/2 @nsitharaman @theicai #UnionGovt#ExamsOnPongalDay#தமிழர்திருநாள்… pic.twitter.com/YcdMckPkf3
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 24, 2024