2.40 கோடி தான்..! சென்னை அணிக்கு மீண்டும் திரும்பினார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடது கை வேக பந்து வீச்சாளரான சாம் கரனை ரூ.2.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே நேற்றைய போல விறுவிறுப்பாகவே தொடங்கியது. அதன்படி, சென்னை அணி மீது அனைவரின் கண்ணும் இருந்த நிலையில், சென்னை அணி சாம் கரணை ஏலத்தில் எடுத்துள்ளனர்.
சென்னை அணிக்கு இல்லாத இடமே பவுலிங் தான். எனவே, சென்னை அணி பவுலிங் வீரர்களுக்கு தான் முக்கியம் கொடுப்பர்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதை போலவே சென்னை பவுலிங்கிற்கு குறி வைத்தது. அப்படி பார்க்கையில், ஆல் ரவுண்டரும், இடது கை வேக பந்து வீச்சாளருமான சாம் கரணை சென்னை அணி ஏலத்தில் கேட்டது.
அடிப்படைத் தொகையாக ரூ.2 கோடிக்கு அவர் ஏலத்தில் இறங்கிய நிலையில் பஞ்சாப், லக்னோ, சென்னை அணிகள் போட்டியிட்டது. இறுதியில், ரூ.2.40 கோடிக்கு சென்னை அணி சுட்டி குழந்தை சாம் கரணை எடுத்துள்ளது. சாம் கரண் ஏற்கனவே சென்னை அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவரை மீண்டும் அணியில் எடுத்ததால் சென்னை அணி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும், இன்று நடைபெறும் ஏலத்தில் சென்னை அணி இதே போல பவுலிங்கை குறி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.