பிறந்தநாள்: ‘எனக்கு பேனர் வேண்டாம்’… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!
தனது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளிட்டுள்ளார்.

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக திமுகவினர் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது பிறந்தநாளுக்கு பேனர் வைக்கவோ, பட்டாசு வெடிக்கவோ வேண்டாம் என உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அன்றைக்கு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள உதயநிதி, இதுவே தனது பிறந்தநாள் வேண்டுகோள் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில், ” வருகிற நவம்பர் 27-ஆம் தேதி என் பிறந்தநாள் வருவதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கழகத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘கழகத்துக்கு நூறு இளம் பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து தாருங்கள்’ என்று கழகத்தலைவர் அவர்கள் கழக இளைஞர் அணிக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றும்விதமாக, நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப்போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பேச்சாளர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை அறியும்போது, உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.
என் பிறந்தநாள் வருவதையொட்டி, ஃபிளெக்ஸ் பேனர்கள் வைப்பதையும் சுற்றுச்சூழலுக்கு மாக ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகள் வெடிப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கவே, விழி பிதுங்கிக் கொண்டிருக்கும்போது நாம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டோம்.
2026-ல் வெற்றிபெற்று ‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைவதற்கான உறுதியை இந்தப் பிறந்தநாளில் என்னுடன் சேர்ந்து கழகத் தோழர்களும் ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்” என குறிப்பிட்டுள்ளார்.
என் பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறீர்கள். இந்தப் பேரன்பு தொடர்ந்து செயல்படுவதற்கான உற்சாகத்தை, ஊக்கத்தை எனக்குத் தருகிறது .
உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும்… pic.twitter.com/cjxr8o8num
— Udhay (@Udhaystalin) November 25, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025