முதல் நாளிலேயே தொடர் அமளி! இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளியின் காரணமாக மக்களவை கூட்டத் தொடர் ஒத்திவைக்கப் பட்ட நிலையில் தற்போது மாநிலங்கள் அவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

parliament winter session 2024

டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இரங்கல் கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, 12 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 12 மணிக்கு மீண்டும் அவை கூடிய போது அதானி விவகாரம் குறித்துப் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். ஆனால், அவைத் தலைவர் ஓம் பிர்லா அது போன்ற விவாதங்களுக்கு அனுமதியளிக்கவில்லை. இதனால், மக்களவைக் கூட்டத் தொடர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதே போல, எதிர்க்கட்சிகளின் அமளியின் காரணமாக மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காலை கூட்டம் தொடங்கிய போது, சலசலப்பின் காரணமாக 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அமளியில் நீடித்ததால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவரான ஜக்தீப் தங்கர் வரும் புதன்கிழமை அன்று காலை 11 மணி அளவில் மீண்டும் அவை கூடும் எனத் தெரிவித்துள்ளார். நாளை அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதால் நாடாளுமன்ற அமர்வு நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் 11 மணிக்குத் தொடங்குகிறது. குளிர் கால கூட்டத் தொடரின் முதல் நாளிலே இரு அவைகளும் அலுவல் எதுவும் ஏற்படாமல் முடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்