இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுத்த ஹிஸ்புல்லா! 250 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்!
ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜெருசலேம் : இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் நின்றபாடில்லை.
கடந்த ஓராண்டாகவே இந்த இரு அமைப்புகளும் இஸ்ரேல் மீதும் இஸ்ரேல் இந்த இரு அமைப்புகளின் மீதும் போர் செய்து வருகின்றனர். தற்போது மீண்டும், ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளைத் ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சமீபத்தில், காசா மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல் நடத்தியது. இதில், 80 பேருக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருப்பினும், இஸ்ரேல் தனது தாக்குதலில் இருந்து பின்வாங்கவில்லை.
இந்த சூழ்நிலையில் தான் நேற்று (ஞாயிற்றுகிழமை) அன்று வட மத்திய இஸ்ரேலிய பகுதி மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் கிட்டத்தட்ட 250 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை நடத்தி இருக்கின்றனர். இந்த தாக்குதலில் இது வரை 7 பேர் காயமடைந்துள்ளனர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய பயங்கர தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இஸ்ரேலில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், இதற்கு எதிர்வினை தாக்குதலாக இஸ்ரேல் என்ன செய்வார்கள் எங்கு தாக்குதல் நடத்துவார்கள் என அதனை சுற்றியுள்ள பிற நாடுகள் பயத்தில் இருந்து வருகின்றனர்.