’21 நாளில் ஆஜராக வேண்டும்’ …ஊழல் வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன்!

ஊழல் வழக்குத் தொடர்பாக 21 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென அமெரிக்க ஆணையம் சம்மன் அளித்துள்ளது.

Adani - America Court

வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.

இதற்கு, ‘இந்த குற்றச்சாட்டுக்களை நாங்கள் மறுக்கிறோம். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள்’ என அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

மேலும், அமெரிக்கா முன்வைத்த குற்றசாட்டைத் தொடர்ந்து, இந்திய பங்குசந்தையில் கடும் சரிவும் ஏற்பட்டது. இந்த வழக்கில் அதானி மட்டுமின்றி அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, சவுரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த புகாரைத் தொடர்ந்து, அதானி குழும நிறுவன பங்குகள் சுமார் 20 சதவீதம் சரிவை எதிர்கொண்டது. இதற்கிடையில், அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம் என அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் தான் இந்த வழக்கு தொடர்பாக கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி ஆகியோர் 21 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி தங்கள் விளக்கத்தை அளிக்க வேண்டும் என அமெரிக்க ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

நியூயார்க் கோர்ட்டு மூலம் அனுப்பப்பட்டுள்ள இந்த சம்மனுக்கு பதிலளிக்க தவறினால், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கானத் தீர்ப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்