கர்நாடகா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி! 3 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தல்!

கர்நாடகா மாநிலத்தின் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

congress win karnataka 2024

கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இடைத்தேர்தல்களின் முடிவுகளில்  சந்தூர் மற்றும் சிகான் தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இதனையடுத்து , தற்போது கர்நாடகம் மாநிலத்தில் சந்தூர், ஷிகான்,, சன்னப்பட்னா ஆகிய  3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஷிகான் : இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பதான் யாசிரஹ்மத்கான், பாஜக சார்பாக போட்டியிட்ட பரத் பொம்மையை எதிர்த்து 25,413 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பதான் யாசிரஹ்மத்கான் 1,12,642 வாக்குகளும், பரத் பொம்மை 87,308 வாக்குகளும் பெற்றனர்.

சன்னபட்னா : இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட சிபி யோகேஸ்வரா  ஜேடி(எஸ்) கட்சியின் நிகில் குமாரசாமியை எதிர்த்து போட்டியிட்ட நிலையில்,  25,413 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிபி யோகேஸ்வரா 1,12,642 வாக்குகளும், நிகில் குமாரசாமி 87,229 வாக்குகளும் பெற்றனர்.

அதைப்போல, சந்தூர் : இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்ப்பில் போட்டியிட்ட அன்னபூர்ணா 9,649 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக சார்பாக போட்டியிட்ட  பங்காரா ஹனுமந்தாவை எதிர்த்து வெற்றி பெற்றார். அன்னபூர்ணா 93,616 வாக்குகளும், பங்கரா ஹனுமந்தா 83,967 வாக்குகளும் பெற்றனர். கர்நாடகா மாநிலத்தின் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால் தொண்டர்கள் வெடி வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்