“அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகாரப் பாவிகள்”..திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு!!
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அரசு ஊழியர்கள் & குடும்பத்தாரின் ஓட்டுகளை அதிமுக பெற தவறிவிட்டது என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல் சீனிவாசனும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்டபோது திண்டுக்கல் சீனிவாசன்அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகார பாவிகள் என்பது போல பேசிய விஷயம் சர்ச்சையாக கிளப்பியுள்ளது.
இது குறித்து பேசிய அவர் ” 100 கோடி ரூபாய் கூட்டணி காட்சிகள் கேட்கிறார்கள் என்கிற தகவல் உண்மையான தகவல் தான். எடப்பாடி பழனிசாமி எங்களை அழைத்து போகும் கூட்டங்களில் அனைத்திலும் கூட்டணி குறித்து எதுவும் பேசி குழப்பம் செய்யவேண்டாம். மற்ற விஷயங்களை மட்டும் பேசுங்கள். அமைதியாக இருகங்கள், மீதியெல்லாம் நாங்கள் பேசிக்கிறோம் என அறிவுறுத்தியிருக்கிறார்.
தேர்தலுக்கு நல்லக்கூட்டணியை அமைத்திட வேண்டும் என்றால், அதற்கு ஏற்றது போல அண்டர்ஸ்டான்டிங்கில், அண்டர்கிரவுண்ட் வேலை அருமையாக நடைபெற்று வருகிறது” என கூட்டணிக்கு கட்சி தயாராகி வருவதை சூசகமாக தெரியப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன் ” கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அரசு ஊழியர்கள் & குடும்பத்தாரின் ஓட்டுகளை அதிமுக பெற தவறிவிட்டது .கடந்த தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் யார் என்றால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் தான்.
ஏனென்றால், எனக்கு அந்த தேர்தலில் ஒரு தபால் ஓட்டு கூட விழவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர் கொலைகார பாவிகள்” என பேசியிருக்கிறார். வெளிப்படையாக இவர் அரசு ஊழியர்களை பற்றி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.