அடித்து நொறுக்கிய பாஜக! சறுக்கிய காங்கிரஸ்! மாகாராஷ்டிரா நிலவரம்…
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 218 தொகுதிகளில் பாஜகவின் மகாயுதி கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பாலான தொகுதியில் முன்னிலை பெற்று வருகின்றன.
காலை 11 மணி நிலவரப்படி, பாஜகவின் மகாயுதி கூட்டணியில் பாஜக 125 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 36 தொகுதிகளிலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சி 57 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன.
காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. சிவசேனா (உத்தவ் தாக்கரே) 19 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) 11 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது.
மகாராஷ்டிரா தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 218 தொகுதிகளில் முன்னிலை பெற்று மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க ஆயத்தமாகி வருகிறது. காங்கிரஸின் மகா விகாஸ் கூட்டணி 51 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது.