உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு கணிப்பு!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை கொடுத்துள்ளது.

Low pressure area

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. . இதன் காரணமாக, இன்று 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா?

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை வரை நவம்பர் 24-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், ஏற்கனவே, 22-11-2024 முதல் 24-11-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer