10, 12ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு எப்போது? முழு விவரம் இதோ…
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 9இல் தொடங்கி டிசம்பர் 23இல் நிறைவு பெறுகிறது.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில் 12ஆம் தேர்வானது , டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது. 10ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டு வகுப்பு தேர்வுகளும் டிசம்பர் 23இல் நிறைவு பெறுகின்றன.
10ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை :
- டிசம்பர் 10 – தமிழ்,
- டிசம்பர் 11 – விருப்ப மொழி,
- டிசம்பர் 12 – ஆங்கிலம்,
- டிசம்பர் 16 – கணிதம்,
- டிசம்பர் 19 – அறிவியல்,
- டிசம்பர் 23 – சமூக அறிவியல்.
12ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை :
டிசம்பர் 9, – தமிழ் / மொழிப்பாடம்.
டிசம்பர் 10 – ஆங்கிலம்.
டிசம்பர் 12 :
கணினி அறிவியல், உயிர் வேதியியல், கணினி பயன்பாடுகள், தகவல்தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், மேம்பட்ட மொழிப்படம் (தமிழ்), Home Science, அரசியல் அறிவியல், நர்சிங், அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்,
டிசம்பர் 14 :
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை இயந்திரவியல், தொழில்நுட்பவியல்.
டிசம்பர் 17 :
கணிதம், விலங்கியல், வணிகம், நுண்ணுறியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள், துணிகள் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங்(பொது)
டிசம்பர் 20 :
வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.
டிசம்பர் 23 :
இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு திறன்கள்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3, 2025இல் தொடங்கி, மார்ச் 25 2025இல் நிறைவு பெறுகிறது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 28, 2025இல் தொடங்கி, ஏப்ரல் 15 2025இல் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.