ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து பற்றி பரவும் வதந்தி! மௌனம் கலைத்த மகள் ரஹீமா!
ஏ.ஆர்.ரஹ்மானும், மனைவி சாய்ரா பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து சில வதந்திகள் இவர்களுடைய விவாகரத்து குறித்து பரவி வரும் நிலையில், ரஹ்மான் மகள் ரஹீமா மௌனம் கலைத்துள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். பொதுவாகவே சினிமா துறையில் இருப்பவர்கள் இப்படி விவாகரத்து அறிவித்துவிட்டார்கள் என்றாலே அவர்களுடைய விவகாரத்துக் இது தான் காரணம் என கூறி பல விஷயங்கள் பரவ தொடங்கும்.
அப்படி தான் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தி வெளியானவுடன் அவருடைய விவாகரத்துக்கு காரணம் குறித்த பல்வேறு தகவல் வெளியானது. குறிப்பாக ரஹ்மான் விவாகரத்து செய்தியை அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் அவருடைய இசை குழுவை சேர்ந்த மோகினி தே என்பவரும் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கி கொடுத்த வழக்கறிஞர் வந்தனா ஷா பரவும் தகவலை போல எந்த தொடர்பும் இல்லை. ரஹ்மான் மற்றும் சாய்ரா இருவரும் பேசி தான் இந்த முடிவு எடுத்தார்கள். மற்றபடி, பரவி வதந்திகள் போல அந்த விவாகரத்துக்கும், இந்த விவாகரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனக்கூறி விளக்கம் கொடுத்திருந்தார்.
இதனையடுத்து, தற்போது மகள் ரஹீமா ரஹ்மான், விவாகரத்து அறிவிக்கப்பட்டதில் இருந்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மௌனம் கலைத்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது ” எப்போதுமே ஒன்றே ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். வதந்திகளை பரப்புபவர்கள் நம்மளுடைய மீது வெறுப்பை செலுத்தியவர்கள் தான்.
இப்படி வதந்திகளை பரப்புவதை நிறுத்திவிட்டு நேர்மையாக நம்மளுடைய வாழ்க்கையை நாம் வாழ பழகவேண்டும்” என ரஹீமா ரஹ்மான் கூறியுள்ளார். இதன் மூலம், தன்னுடைய தந்தை குறித்து இப்படி வதந்தி தகவலை பரப்புபவர்கள் தந்தையை பிடிக்காத ஆட்டக்கள் என மறைமுகமாக ரஹீமா ரஹ்மான் குற்றம்சாட்டியது தெரிகிறது.
அதைப்போல, மற்றோரு பதிவில் ஆடுஜீவிதத்தின் பின்னணி இசைக்காக மீடியாவில் ஹாலிவுட் மியூசிக் விருதை ரஹ்மான் வென்றதைப் பற்றிய தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதில் “நீங்கள் எப்போதும் எங்கள் ராஜாவாகவும் எங்கள் தலைவராகவும் இருப்பீர்கள்” என தந்தை குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.