எஸ்பி வேலுமணி சொல்லியும் மோதலில் ஈடுபட்ட நிர்வாகிகள்! தள்ளுமுள்ளான அதிமுக கள ஆய்வு கூட்டம்!

அதிமுக மாவட்ட செயலாளர் பணிகளை செய்யவில்லை என கொள்கை பரப்புச் செயலாளர் புகார் கூறியதால் அதிமுக நிர்வாகிகளுக்கு இடையே கைகலப்பு வெடித்துள்ளது.

SPVelumani

திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்தில் கழக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள்.

இந்த கூட்டத்தில்  நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மேடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாகவும் மாறியது. முதற்கட்டமாக, அதிமுக மாவட்ட செயலாளர் பணிகளை செய்யவில்லை என கொள்கை பரப்புச் செயலாளர் புகார் கூறியதால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தைய்யா தற்போதைய மாவட்டச் செயலர் கணேஷ் ராஜா தன்னுடைய பணியை சரியாக செய்யவில்லை என  புகார் அளித்து பேசிய பேச்சுக்கு, கணேஷ் ராஜா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாப்புலர் முத்தையா ஆதரவாளர்களுக்கும், கணேஷ் ராஜா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த மற்றவர்கள் சண்டையில் ஈடுபடவேண்டாம் என தடுத்தனர். ஆனாலும், கைகலப்பு நிற்கவில்லை. எஸ்.பி.வேலுமணி சொல்ல சொல்ல கேட்காமல் தொடர்ச்சியாகவே வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்திற்குமேல் எஸ்.பி.வேலுமணி சற்று கடுப்பாகி மைக்கில் பிரச்னையை விடுங்கள் என கூற மறுபுறம் மூத்த நிர்வாகிகள் சண்டைபோட்டுக்கொண்டிருந்தவர்களை சமாதானப்படுத்தி சண்டையை நிறுத்தினார்கள்.  இருப்பினும், இன்று அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் மோதிக் கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும், இதைப்போலவே, கும்பகோணத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசத் தொடங்கும் போது தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்