“ரஷ்யாவை தாக்க ஏவுகணை வழங்கும் நாடுகளையும் தாக்குவோம்”! அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!
உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது விதமான ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ரஷ்யா இராணுவ வீரர்கள், வட கொரியா சில வீரர்களும் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
ஏவுகணையின் பெயர் புயல் நிழல் ஏவுகணை (Storm Shadow Missile) உலகிலேயே புயல் நிழல் ஏவுகணை பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்பதும் தெரியவந்திருக்கிறது. அதைப்போல, உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
தொடர்ச்சியாக போர் அங்கு நடந்து வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவுக்கு எதிராக NATO (32 நாடுகள் ஒன்றியம்) நாடுகள் போருக்குத் தயாராகிக் கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரஷ்யாவைத் தாக்க ஏவுகணை வழங்கும் நாடுகளை ரஷ்யா தாக்கும் என அதிபர் புதின் பேசியுள்ளார்.
ஏற்கனவே, ரஷ்யாவுக்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியதால், ரஷ்யாவும் உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அனுமதி கொடுத்து அதற்கான ஒப்பந்தத்துக் கையெழுத்துப் போட்டிருந்தார்.
எனவே, போர் பெரிய போராக வெடிக்க இது ஒரு முக்கியமான காரணமாகவும் பார்க்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது, ரஷ்யாவைத் தாக்க ஏவுகணை வழங்கும் நாடுகளை ரஷ்யா தாக்கும் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதிபர் புதின் பேசியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர் ” உக்ரைன் போர் விரிவடையும் பட்சத்தில் கட்டாயமாக நாங்கள் பதிலடி கொடுப்போம். ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடுகளின் இராணுவ வசதிகளைக் குறிவைக்க ரஷ்யாவிற்கு உரிமை உண்டு.
எனவே, ரஷ்யா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை வழங்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும். ரஷ்யா மீது தாக்குதல் நடத்தத் தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவி செய்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான போரை உலகப் போராக மேற்கத்திய நாடுகள் மாற்ற முயற்சி செய்து வருகிறது” எனவும் அமெரிக்காவை மறைமுகமாக குற்றம்சாட்டி அதிபர் புடின் பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025