ஒரே நிகழ்ச்சியில்…ஒரே வரிசையில் பாராமுகத்தில் தனுஷ்-நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!
தனுஷை கடுமையாக விமர்சித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் நேற்று இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. இதில் நடிகர் தனுஷும், நயன்தாராவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். இருவரும் ஒரே வரிசையில் சற்று அருகாமையில் இருந்துள்ளனர். ஆனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் பாராமுகத்தில் இருந்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. தனுஷ் மற்றும் நயன்தாராவுக்கு இடையேயான பிரச்சினை தான் கடந்த ஒரு வாரமாக சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. நயன்தாரா, தனுஷை கடுமையாக விமர்சித்து சமீபத்தில் 3 பக்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022 ஜூன் 9-ம் தேதி காதலித்து திருமணம் முடித்தார். இருவரின் இந்த காதல் திருமணத்திற்கும் நானும் ரவுடி தான் திரைப்படம் மிக முக்கியமான ஒன்றாகும். இதனால், இந்த திருமணத்தை உள்ளடக்கிய நயன்தாராவின் டாக்குமெண்டரி ஒன்று தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தின் சில காட்சிகள் மற்றும் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட காட்சிகளை நயன்தாராவின் டாக்குமெண்டரியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை. இந்த விவகாரமாக தான் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதற்கு 2 வருடங்களாக தடையில்லா சான்றிதழ் வழங்க தனுஷ் சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே தனுஷை விமர்சித்து நயன்தாரா அந்த கடிதத்தை எழுதி இருக்கிறார். இந்த சூழலில் தான் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், தனுஷ் மற்றும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் கலந்துக் கொண்டனர். ஒரே நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இருவரும் ஓரே வரிசையில் அமர்ந்து இருந்தனர். ஆனாலும், ஒருவரை ஒருவர் பார்க்காமல் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.