“ஹம்மா ஹம்மா பிடிக்கலைனு சொன்னாரு”…ஏ.ஆர்.ரஹ்மானால் வேதனைப்பட்ட ராப் பாடகர்!
ஹம்மா ஹம்மாவை முதலில் விமர்சித்ததற்காக இசை புயல் ஏஆர் ரஹ்மான் தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாக சமீபத்தில் ராப் பாடகர் பாட்ஷா தெரிவித்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும், அவருடைய மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதாக அறிவித்தது தான். எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் ட்ரெண்டிங்கில் இருப்பதன் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த யாருக்கும் தெரியாத விஷயங்கள் பற்றிய தகவலும் வெளியாகிக்கொண்டு இருக்கிறது.
அப்படி தான் தற்போது ‘பாம்பே’ படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய ஹிட்டாகி இருந்த “ஹம்மா ஹம்மா” பாடலை ஒரு இசை கலைஞர் ரீமிக்ஸ் செய்தபோது அந்த பாடலை கேட்டு சோகத்துடன் கலந்த கோபமடைந்த சம்பவத்தை ராப்பர் பாட்ஷா தெரிவித்து இருக்கிறார்.
ராப்பர் பாட்ஷா பழைய பாலிவுட் பாடல்களை மறுஅமைத்து வெளியிடுவதில் ஒரு வல்லளாக திகழ்ந்து வருகிறார். ‘காலா சஷ்மா’, ‘கோரே கோரே முக்தே’, மற்றும் ‘தம்மா தம்மா லோக்’ போன்ற பல பிரபல ஹிந்தி பாடல்களை ரீமிக்ஸ் செய்து தான் யார் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார். இப்படி ரீமிக்ஸ் செய்வதில் கிங்காக இருந்த இவர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த ஹம்மா ஹம்மா பாடலை 2017-ஆம் ஆண்டின் ரொமான்டிக் திரில்லர் ‘ஓகே ஜானு’ படத்திற்காக ராப்பர் பாட்ஷா ரீமிக்ஸ் செய்திருந்தார்.
அந்த பாடல் வெளியான சமயத்தில் இதுவும் இதுவும் ஒன்னா? என “ஹம்மா ஹம்மா” பாடலுடன் ஒப்பிடப்பட்டு பல விமர்சனங்களுக்கு உள்ளானது. ரீமிக்ஸ் செய்த ராப்பர் பாட்ஷாவும் இந்த விமர்சனங்களால் மிகவும் வேதனையடைந்ததாகவும் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்
இது குறித்து பேசிய அவர் ” ஹம்மா ஹம்மா” பாடலை நான் ரீமிக்ஸ் செய்தபோது பல விதமான விமர்சனங்களை சந்தித்தேன். பாடலை கேட்டுவிட்டு ஏ.ஆர்.ரஹ்மானுக்கே பிடிக்கவில்லை. இந்த பாடல் நன்றாக இருக்கிறது என்று அவர் முதலில் ஏற்றுக்கொள்ளவே இல்லை. நேரடியாகவே என்னிடம் பிடிக்கவில்லை அது குறையாக இருக்கிறது இது குறையாக இருக்கிறது என்பது போல கூறினார்.
ரஹ்மான் இப்படி கூறியது எனக்கு வேதனையை உண்டு செய்தது. அதன்பிறகு பாடல் தொடர்ச்சியாக பலரும் கேட்டு ஹிட்டானா பிறகு என்னிடம் ஒரு நிகழ்ச்சியில் ரஹ்மான் என்னை மன்னித்துவிடுங்கள் பாடல் கேட்க கேட்க அருமையாக இருக்கிறது. முதலில் கேட்டபோது பிடிக்க நேரம் ஆனது இப்போது கேட்க கேட்க எனக்கு பிடித்துள்ளது” என்று ரஹ்மான் ” தன்னிடம் கூறியதாக ராப்பர் பாட்ஷா தெரிவித்திருக்கிறார்.